தீயசக்தியையும், அதர்மத்தையும் எதிர்த்து உண்மையான தர்ம யுத்தம் தொடங்குகிறது

வரும் சட்டமன்றத் தேர்தலில், தீய சக்‍தியையும், அதர்மத்தையும் எதிர்த்து, அ.ம.மு.க. போரிடுவதாக கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக்‍கழக அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திரு.டிடிவி தினகரன், கூட்டணி குறித்து ஓரிரு தினங்களில் தெரிவிக்‍கப்படும் என குறிப்பிட்டார்.

டெல்டா மாவட்டங்களில் அ.ம.மு.க.வினரிடம் ஒரு நபர் வேண்டுமென்றே வதந்தியைப் பரப்பி வருவதாகவும், இதனை தொண்டர்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் எனவும், திரு.டிடிவி தினகரன் தெரிவித்தார்.