அமமுக பொதுச்செயலாளர் பிறந்ததினம் கழகத்தினர் கொண்டாட்டம்

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, கழக நிர்வாகிகள் கேக்‍ வெட்டியும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாகக்‍ கொண்டாடினர்.

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் பிறந்தநாளையொட்டி, பாளையங்கோட்டை பகுதி கழகம் சார்பில், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில், நெல்லை மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. எஸ்.பரமசிவ ஐயப்பன், கழக அமைப்புச் செயலாளர் திரு. ஏபி. பால் கண்ணன் தலைமையில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். பாளையங்கோட்டை பகுதி செயலாளர் திரு.ரமேஷ், நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் திரு.தாழை மீரான் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

திரு. டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாநகர் தெற்கு மாவட்ட கழக சார்பில், மாவட்ட செயலாளர் திரு.ஷ.ராஜலிங்கம், கழக அம்மா பேரவை செயலாளர் திரு. மாரியப்பன் கென்னடி ஆகியோர் தலைமையில் நள்ளிரவு 12 மணி அளவில், கீழவாசல் புனித மரியன்னை தேவாலயம் முன்பாக கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இதில், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் திரு. சரவணன், வர்த்தக அணி இணைசெயலாளர் திரு. ஓம்ஜெயம் பாரதிமுருகன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

திரு. டிடிவி தினகரன் பிறந்த நாளையொட்டி, திருப்பூர் புறநகர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றிய கழகம் சார்பில் சிந்திலுப்பு பகுதியில் உள்ள ஞானாம்பிகை திருநாகேஸ்வரர் கோவிலில், சிறப்பு பூஜைகள், சிறப்பு அலங்காரம் ஆராதனை நடைபெற்றது. பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது, குடிமங்கலம் ஒன்றிய கழக செயலாளர் திரு. சிவானந்தம், ஓன்றிய துணை செயலாளர் திரு.சண்முகம், சோமவாரப்பட்டி ஊராட்சி செயலாளர் திரு.தேவராஜ் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

கழகப் பொது செயலாளர் திரு.டிடிவி. தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட அ.ம.மு.க மருத்துவ அணி செயலாளர் டாக்டர் ரவி ஏற்பாட்டின் பேரில், எட்டாமடை பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமை கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.பி. செந்தில் முருகன், இணைச் செயலாளர் திருமதி அம்மு ஆன்றோ அகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வில், அழகியபாண்டியபுரம் பேருர் கழக செயலாளர் திரு.அமலதாஸ், ஒன்றிய கழக செயலாளர் திரு.கனீஸ் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் பல்வேறு நோய்களுக்கு பரிசோதனைகள் செய்யபட்டு, அதற்குரிய மருந்துகளும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கபட்டது.