அ.ம.மு.க. பொதுச் செயலாளர் பிறந்த நாள் : அமீரக கழகம் சார்பில் கொண்டாட்டம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனின் பிறந்த நாள் விழா, ஐக்கிய அரபு அமீரக கழகம் சார்பில் துபாயில் கொண்டாடப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், துபாய் மலபார் ஹோட்டலில் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், அமீரக தமிழ் சங்க தலைவர் டாக்டர் ஜெயந்தி மாலா சுரேஷ் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார். அமீரக அமைப்பாளர் கீழக்கரை திரு. சாதிக், செயலாளர் திரு. பாவை மும்பாட்சா, பொருளாளர் ஒரத்தநாடு திரு. எஸ்.குமரேசன், சட்ட ஆலோசகர் அட்வகேட் திரு.அக்பர் பாதுஷா, துணை ஒருங்கிணைப்பாளர் லோட்டஸ் திரு. எம். சந்திர சேகர், இணை செயலாளர் திரு. பா.ஆதி கிளிண்டன் மற்றும் அமீரக கழக நிர்வாகிகள் சென்டகாடு திரு. சேகர், கோனார் நாடு திரு. எம்.மணிகன்டன், எழும்பூர் திரு. மோகன், தஞ்சை திருமதி. கலைவானி, ஏழாகுறிச்சி திரு. பழனிசாமி, கூத்தாநல்லூர் திரு. சபீர், திரு. இதயதுல்லா ஆகியோர் பங்கேற்றனர்.