ஸ்டெர்லைட் ஆலை தடை உயர்நீதிமன்ற உத்தரவுக்‍கு டிடிவி தினகரன் வரவேற்பு

கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ட்விட்டர் அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருப்பதற்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஸ்டெர்லைட் ஆலைக்கான தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு மகிழ்ச்சிக்கும் வரவேற்புக்கும் உரியது என குறிப்பிட்டுள்ளார். இது, தூத்துக்குடி மக்களின் உணர்வுகளுக்கும், தியாகத்திற்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும் என அவர் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

சட்டத்தின் அடிப்படையில் உயர்நீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பில் எந்தவித மாற்றமும் வந்துவிடாத அளவுக்குத் தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை சட்டப்படி நிரந்தரமாக மூடும் வரை, தமிழக அரசு எல்லா நிலைகளிலும் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும் எனவும் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.