பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய கழக நிர்வாகிகள் நியமனம்

திருச்சி, தஞ்சை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கான அமமுக சார்பு அணி, பகுதி, ஒன்றியம், நகரம் மற்றும் பேரூராட்சிகளுக்கு புதிய கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திருச்சி வடக்கு, தஞ்சாவூர் மாநகர் மற்றும் திருவள்ளூர் மத்திய மாவட்ட சார்பு அணி, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் வடக்கு மற்றும் விருதுநகர் கிழக்கு மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி, வார்டு கழக செயலாளர்களும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட நெரிஞ்சிப்பேட்டை, எலத்தூர் பேரூராட்சிக் கழக செயலாளர்கள் மற்றும் ஈரோடு புறநகர் மாவட்டத்திற்குட்பட்ட காசிபாளையம், ஒலகடம் பேரூராட்சிகளுக்கு வார்டு கழக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.