சின்னம்மா நலமுடன் உள்ளார் - விக்‍டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் பேட்டி

சின்னம்மா நலமுடன் இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், பெங்களூரு அரசு விக்டோரியா மருத்துவமனை கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னம்மாவுக்‍கு தொடர்ந்து சிகிச்சை அளிக்‍கப்படுவதாகத் தெரிவித்தார்.