சின்னம்மாவுக்‍கு உடனடியாக சி.டி. ஸ்கேன் எடுத்து உரிய சிகிச்சை அளிக்‍க வேண்டும்

சின்னம்மாவுக்‍கு உடனடியாக சி.டி. ஸ்கேன் எடுத்து உரிய சிகிச்சை அளிக்‍க வேண்டும் என்பதே தங்களின் பிரதான நோக்‍கம் என ஜெயா தொலைக்‍காட்சியின் முதன்மை செயல் அதிகாரியும், அவரது உறவினருமான திரு. விவேக்‍ ஜெயராமன் தெரிவித்துள்ளார். தியாகத்தலைவி சின்னம்மா சிகிச்சை பெறும் மருத்துவமனைக்‍குச் சென்று, மருத்துவர்களை சந்தித்துவிட்டு வெளியே வந்த திரு. விவேக்‍ ஜெயராமனிடம், சிகிச்சை விவரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதனைத் தெரிவித்தார்.