சாலை விபத்தில் உயிரிழந்த கழக நிர்வாகிக்கு டிடிவி தினகரன் அஞ்சலி

கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தஞ்சை செங்கிப்பட்டி அருகே நேற்று நிகழ்ந்த சாலை விபத்தில் மரணமடைந்த தேனி வடக்கு மாவட்டம், ஆண்டிப்பட்டி ஒன்றியம் மொட்டனுத்து ஊராட்சி மன்றத் தலைவர் திரு.பி.கே.ராஜன் என்கிற கருப்புவின் உடலுக்கு கனத்த இதயத்தோடு அஞ்சலி செலுத்தினார்.