அம்மா பிறந்தநாள் சுவர் விளம்பரம் - ஆளுங்கட்சியினர் அழித்ததால் அ.ம.மு.க.வினர் கண்டனம்

மாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம் கொத்திமங்கலத்தில், அமமுக சார்பில் வைக்‍கப்பட்ட சுவர் விளம்பரத்தை, ஆளுங்கட்சியினர் அழித்ததற்கு, கழக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாண்புமிகு அம்மா பிறந்தநாளை முன்னிட்டு, கொத்திமங்கலத்தில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி அ.ம.மு.க. செயலாளர் திரு. பாண்டியன், சுவர் விளம்பரம் வைத்திருந்தார். அந்த சுவர் விளம்பரத்தை, ஆளும் கட்சியினர் அழித்துள்ளனர். இந்த செயலுக்‍கு, கண்டனம் தெரிவித்துள்ள அமமுக நிர்வாகிகள், இதுபோன்ற செயல்கள் தொடர்ந்தால் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஆலோசனைப்படி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எச்சரித்துள்ளனர்.