வ.உ.சிதம்பரனாரை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் - டிடிவி தனகரன் டுவீட்

அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தனகரன் அவர்கள் இன்று தனது டிவிட்டர் அறிக்கையில், நாம் விடுதலைக் காற்றை சுவாசிப்பதற்காக தனது சொத்து சுகங்களையெல்லாம் இழந்து பாடுபட்ட ‘செக்கிழுத்த செம்மல்’ வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாள் இன்று எனவும்.

ஆங்கிலேயரின் அத்தனை அடக்குமுறைகளையும் எதிர்கொண்டு களத்தில் நின்ற சுதந்திர போராட்ட வீரராக, தமிழ்நாட்டில்  தொழிலாளர் போராட்டத்தை முதன்முதலில் வெற்றிகரமாக நடத்திய தொழிற்சங்கவாதியாக, ஒப்பிடமுடியாத தியாக சீலராக திகழ்ந்த வ.உ.சிதம்பரனாரை  எந்நாளும் போற்றி வணங்கிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.