விளாத்திகுளம் தொகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அமமுக-வில் இணைந்தனர்

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் அமமுக-வில் இணைந்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர், மக்கள் செல்வர், நாளைய முதல்வர், திருமிகு டிடிவி தினகரன் எம்எல்ஏ அவர்கள் தலைமை ஏற்று கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், V விஜயபாஸ்கரன் BE., அவர்கள் ஏற்பாட்டில் சக்கம்மாள்புரம் ராமமூர்த்தி (முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்), திமுகவை சேர்ந்த சுப்பிரமணியன் (எ) குமார் (முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர்), நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பசுவந்தனை, மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், கழக தேர்தல் பிரிவு செயலாளர், தென் மண்டல பொறுப்பாளர், கயத்தார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், கடம்பூர் இளைய ஜமீன்தார், திரு SVSP மாணிக்கராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர், திரு A சிவபெருமாள் MA.,Ex.MLA ஆகியோர் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.

இந்நிகழ்வில் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், கரன்சிங், கயத்தார் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர், கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர், A மகேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இதயதெய்வம் அம்மா தொழிற்சங்கம் பேரவை செயலாளர், A உடையார் பாண்டி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஆண்கள் பிரிவு செயலாளர், K மகாராஜா, மாவட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மன்றம் இணை செயலாளர், சண்முக சாமி பாண்டியன் (பொறுப்பு), ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய கழக துணை செயலாளர், மாடசாமி பாண்டியன் (பொறுப்பு) மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.