நடுநிலை தவறி திமுகவுக்கு சொம்பு தூக்கும் விகடன் - விரிவான அலசல்

விகடனில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியாகி இருக்கிறது. அதில் திமுக கூட்டணி தான் 2021ல் வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.  மேலும் பழனிசாமிக்கு ஆதரவாகவும் கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் எப்படி சர்வே எடுத்திருக்க முடியும், திமுகவுடன் தொடர்பில் இருக்கும் விகடன், திமுக சார்பாகவே செயல்படுகிறது என்கிற ரீதியில் இது உள்ளது.

இப்படித்தான் 2011 தேர்தலில், திமுக தான் வெற்றிப்பெறும் என இதே விகடன் கருத்துக்கணிப்பு வெளியிட்டது. ஆனால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்காமல், திமுக படுதோல்வி அடைந்தது நாடறியும். இப்போ 2021ல், திமுக ஜெயிக்கும்னு விகடன் மறுபடியும் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இப்பவும் அதே ரிசல்ட் தான், திமுகவுக்கு நிச்சயம்  படுதோல்வி தான்.

அப்போ அம்மா ஜெயிச்சாங்க, இப்போ அம்மா பெயரில் இருக்கிற கட்சி ஜெயிக்கப்போகிறது என்பது மட்டுமே உண்மை.   

அசிங்கப்படுறது விகடனுக்கு ஒன்னும் புதுசு இல்லையே?

ஒருப்பக்கம் கொரோனா, ஒருப்பக்கம் கையாலாகாத பழனிசாமி அரசு, இன்னொருபக்கம் பொறுப்பில்லாத எதிர்க்கட்சி, இப்படி மும்முனை தாக்குதலில் தமிழக மக்கள் நொந்து போய் வீட்டிற்குள்ளயே முடங்கி இருக்கும் நிலையில், இவனுங்க யார்கிட்ட சர்வே எடுத்தானுங்கனு தெரியலையே. ஒருவேளை அறிவாலயத்துக்குள்ள எடுத்ததானுங்களா? அங்கயே எடுத்திருந்தால் கூட, இந்த ரிசல்ட் வர வாய்ப்பில்லையே..

இப்போதெல்லாம் தினசரி செய்திதாள்களில் பிரதானமாக இடம்பிடிக்கும் செய்திகள் இரண்டு தான்,

ஒன்று, பழனிசாமி & கோவின் நிர்வாக சீர்கேடு மற்றும் ஊழல் பட்டியல், இரண்டு ஆட்சியில் இல்லாவிட்டாலும், திருட்டு, ஆள்கடத்தல் முதல் கொலை செய்வது வரை திமுகவினரின் அடாவடித்தனமும் தான் இடம்பெறுகிறது.

பத்தாண்டுகளாய் ஆட்சியில் இல்லாத திமுகவினரிடம் ஆட்சி போனால், காய்ந்த மாடு கம்பில் பாய்ந்த மாதிரி, வீடு புகுந்து திருடுவார்கள் என தமிழக மக்கள் பீதியில் இருக்கும் நிலையில், திமுக தான் வெல்வார்கள் என யாரிடம் போய் விகடன் சர்வே எடுத்தார்கள் என்று தான் தெரியவில்லை.

ஒருவேளை செவ்வாய் கிரகத்தில் எடுத்திருப்பார்களோ?