அமமுக பொருளாளர் வெற்றிவேல் பெரியார் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்

பெரியாரின் 142-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜெமினியில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த பெரியாரின் திருவுருவப் படத்திற்கு அமமுக சார்பில் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது

அமமுக பொருளாளர் மற்றும் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.வெற்றிவேல் அவர்கள் பெரியார் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்வில் மேலும் கழக அமைப்பு செயலாளர் நேதாஜி கணேசன் , கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி, தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் பாபு ,தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் செந்தமிழன், வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் சந்தான கிருஷ்ணன்,சேப்பாக்கம் பகுதி கழக செயலாளர் ராஜேந்திரன்  உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துக்கொண்டு பெரியார் அவர்களுடைய திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.