மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் உயிரிழந்ததற்கு டிடிவி தினகரன் வேதனை

மூத்த ஒளிப்பதிவாளர் திரு. வேல்முருகன், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததற்கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், மூத்த ஒளிப்பதிவாளர் திரு.வேல்முருகன் கொரோனா பாதிப்பினால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்‍ கொண்டுள்ளார்.

 

இந்த நெருக்கடியான நேரத்தில் ஊடகத்துறையினர் மிகுந்த கவனத்துடன் பணியாற்றுவதுடன், உடல் நலத்திலும் கூடுதல் அக்கறை காட்ட வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.