தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை

நீட் உட்பட மாண்புமிகு அம்மா எதிர்த்த அனைத்து திட்டங்களையும் தமிழகத்திற்கு கொண்டு வந்த ஆளுங்கட்சியினரை தோற்கடித்து, அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைக்க அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களிக்க வேண்டுமென கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திரு.எஸ்.பரமசிவ ஐயப்பனை ஆதரித்து, கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி.தினகரன் நாங்குநேரி பேருந்து நிலையம் அருகே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், சட்டபேரவையில் நிதிநிலை அறிக்கையில், ஜி.எஸ்.டி. நிலுவைத்தொகை உட்பட மத்திய அரசிடமிருந்து எந்த நிதியும் வரவில்லை என தெரிவித்து விட்டு, பிரதமர் மோடியுடன் பிரச்சாரம் செய்யும்போது மத்திய அரசு எல்லா நிதியையும் கொடுத்ததாக, ஆளுங்கட்சியினர் இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டினார். தமிழகத்தில் வெளிப்படையாக ஆட்சி அமைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாய்ப்பளிக்க வேண்டுமெனவும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திரு.வடமலை பாண்டியனை ஆதரித்து திருச்செந்தூர் பேருந்து நிலையம் அருகே கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்கியதில் ஆளும் கட்சியினர் மிகப்பெரிய முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக வேட்பாளர் திரு. ஏரல்.எஸ்.ரமேஷ்க்கு ஆதரவாக, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், ஸ்ரீவைகுண்டம் பேருந்து நிலையம் அருகிலுள்ள 4 முனை சந்திப்பு சாலை பகுதியில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் தோல்வி பயத்தில் ஆளும்கட்சியும், தி.மு.க-வும் பலகோடி ரூபாய் செலவு செய்து கருத்துக்‍கணிப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ ‍கழக கூட்டணி கட்சியான தேமுதிக சார்பில் தூத்துக்‍குடி தொகுதியில் போட்டியிடும் திரு.சந்திரன் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திரு. ஆறுமுக நயினாருக்‍கு ஆதரவாக, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், தூத்துக்குடி குருஸ் பர்னாந்த் சிலை பகுதியில், தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தூத்துக்‍குடி துப்பாக்‍கிச்சூட்டிற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்‍கை எடுக்‍கப்படும் என கூறினார்.

தூத்துக்குடியை தொடர்ந்து, விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திருமதி. சீனிசெல்வியை ஆதரித்து கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார். விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்களிடையே பிரசாரம் மேற்கொண்ட திரு.டிடிவி தினகரன், உண்மையான அம்மாவின் ஆட்சி அமைய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.