அமமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு டிடிவி தினகரன் பிரச்சாரம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலையொட்டி, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், இன்று பொள்ளாச்சி, மடத்துக்குளம் உட்பட 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர்களுக்கும், கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன், சூறாவளி பிரச்சாரம் ‍மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார். செல்லுமிடம் எல்லாம் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இன்று பிற்பகல் 3 மணிக்கு பொள்ளாச்சி தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக திருவள்ளுவர் திடலிலும், பிற்பகல் 3.30 மணிக்கு மடத்துக்குளம் தொகுதி நாலு ரோடு பகுதியிலும், மாலை 4.30 மணிக்கு ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக பேருந்து நிலையம் அருகிலும், மாலை 5 மணிக்கு வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட ஆத்துமேடு என்ற இடத்திலும் அமமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார். திண்டுக்கல், ஆத்தூர், நத்தம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அமமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நாகல் நகர் என்ற இடத்தில் மாலை 6 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ளும் திரு.டிடிவி தினகரன், நிலக்கோட்டை தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் அருகில் இரவு 7 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பெரியகுளம் தொகுதி கழக வேட்பாளருக்கு ஆதரவாக புதிய பேருந்து நிலையம் அருகில் இரவு 8 மணிக்கு கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.