நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கிட தந்தை பெரியார் பிறந்தநாளில் சபதமேற்போம்

தந்தை பெரியார் தந்துவிட்டுச் சென்றிருக்கும் அறிவாயுதத்தை ஏந்தி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, சமூக நீதிக்கு பங்கம் வராமல் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கிட அவரது பிறந்தநாளில் சபதம் ஏற்போம் என, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திரு. டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சமுதாய ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்கப் பாடுபட்ட புரட்சியாளர், சமூக நீதிக்காக சளைக்காமல் உழைத்த போராளி, பெண்ணுரிமைக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த பெருந்தகையாளர், திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் அடையாளம் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியார் தந்துவிட்டுச் சென்றிருக்கும் அறிவாயுதத்தை ஏந்தி ஏற்றத்தாழ்வுகள் இல்லாத, சமூக நீதிக்கு பங்கம் வராமல் நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கிட இந்நாளில் சபதம் ஏற்போம் என்றும் திரு.டிடிவி தினகரன்.