உண்மையான நல்லாட்சி அமைந்திட ஒன்றுபட்டு உழைத்திடுவோம்

கழகப் பொதுசரசெயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தனது டிவிட்டர் அறிக்கையில்,

அம்மா அவர்களின் உண்மையான நல்லாட்சியைத் தமிழகத்தில் மீண்டும் கொண்டுவருவதற்கும் தீய சக்திகளைமீண்டும் தலையெடுக்க விடாமல் செய்வதற்கும், தமிழினத் துரோகிகளை வேரோடு வீழ்த்திடவும் வரும்சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணி அமைத்துபோட்டியிடுகிறோம்.

நம்முடைய இலக்கை மனதில் வைத்து தமிழகத்தைக் காத்திடவும், துரோகத்தை வீழ்த்திடவும் நம்முடையவெற்றிக் கூட்டணிக்கு பலம் சேர்க்கிற வகையில் ஏற்கனவே உள்ள தோழமைக் கட்சிகளுடன் சேர்த்துதற்போது தேசிய முற்போக்கு திராவிட கழகத்துடனும் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

இந்த யுத்தக்களத்தில் வெற்றியை மட்டுமே முழு நோக்கமாக கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தமுடிவினை ஒவ்வொரு கழக உடன்பிறப்புகளும் புரிந்துகொள்வீர்கள் என உறுதிபட நம்புகிறேன்.

தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த கழக உடன்பிறப்புகளுக்குஎதிர்காலத்தில் உரிய வாய்ப்பும், அவர்களது கடுமையான உழைப்புக்கான அங்கீகாரமும் நிச்சயம் வழங்கப்படும்என உறுதி அளிக்கிறேன்.

எந்தவித மனமாச்சர்யங்களுக்கும் இடமளிக்காமல் 234 தொகுதிகளிலும் நமது கழக வேட்பாளர்களும், தோழமைக்கட்சிகளின் வேட்பாளர்களும் வெற்றி பெற்றிட நீங்கள் ஒவ்வொருவரும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடன்உழைத்திடவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என வலியுறித்தியுள்ளார்.