ஈஸ்டர் பெருவிழாவையொட்டி, கிறிஸ்தவ பெருமக்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

ஈஸ்டர் திருநாளையொட்டி கிறிஸ்தவ பெருமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் ஏசுபிரானின் போதனைகளை என்றும் நம் இதயத்தின் முன்னிறுத்தி அவற்றை கடைபிடிப்போம் என தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் திருநாளையொட்டி அமமுக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், அன்பின் வடிவான அருள்நாதர் ஏசுபிரான் உயிர்த்தெழுந்த பொன்னாளாம் ஈஸ்டர் திருநாளை உவகையுடன் கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் தமது இதயம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

துரோகத்தாலும், பகையாலும் கல்வாரி சிலுவையில் பாடுகளை சுமந்த ஏசுபிரான் உயிர்த்தெழுந்த திருநாள், நமக்கு புதிய நம்பிக்கையோடும் புதிய மகிழ்ச்சியோடும் கூடிய புதுவாழ்வைத் தந்திடும் நன்னாளாக அமையட்டும் என்றும், இதுவரை நம்மைச் சூழ்ந்திருந்த துன்பங்கள் அனைத்தும் விலகட்டும் என்றும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சகோதர அன்பே பிரதானம் என்பதை போதித்த அருள்நாதரின் போதனைகளை என்றும் நம் இதயத்தின் முன் நிறுத்தி அவற்றை கடைபிடிப்போம் என்பதை தெரிவித்து ஈஸ்டர் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும் தனது நல்வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகின்றேன் என்றும் திரு. டிடிவி தினகரன் ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.