திருப்பூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் இருவர் உயிரிழந்த நிகழ்வு கடும் அதிர்ச்சி

கழகப் பொதுச்செயளாலர் டிடிவி தனகரன் அவர்கள் இன்று தனது டிவிட்டர் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளதாவது, திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் இருவர்  மின்தடையால்  ஆக்சிஜன் செலுத்த முடியாமல் உயிரிழந்த நிகழ்வு கடும் அதிர்ச்சியளிக்கிறது.

ஏற்கனவே நோயின் வீரியத்தால் நாள்தோறும் உயிரிழப்புகள் ஏற்பட்டுவரும் நிலையில், நிர்வாக அலட்சியத்தால் இப்படி அநியாயமாக உயிர்கள் பறிபோவதை ஏற்கமுடியாது. இதற்குக் காரணமானவர்கள்மீது எடப்பாடி அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். உயிரிழந்தோர் குடும்பத்திற்கு கூடுதலாக இழப்பீடு வழங்கவேண்டும்.

தமிழகத்தில் இனி இத்தகைய சம்பவம் நிகழாமல் தடுக்கத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சுகாதாரத்துறை அனுப்பிட வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.