கழக வேட்பாளர்கள் பொதுமக்களிடம் தேர்தலில் தீவிர ஆதரவு திரட்டி வருகின்றனர்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து, மாநிலம் முழுவதும் பொதுமக்களைச் சந்தித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கழக வேட்பாளர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் சட்டமன்ற தொகுதியில் கழக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளர் அனகை திரு.முருகேசன் போட்டியிடுகிறார். அனகாபுத்தூர் கன்னியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்து அவர் தனது பிரச்சாரத்தை துவக்கினார் . பின்னர் அனகாபுத்தூர் 18 வார்டுகளிலும் உள்ள பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

தாம்பரம் சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு.ம.கரிகாலன் தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் சிஎஸ்ஐ டென்த் மார்க் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். செங்கல்பட்டு மேற்கு பரங்கிமலை ஒன்றிய செயலாளர் திரு. நந்தகுமார், அகரம் பேரூராட்சி செயலாளர் திரு. ம.அஜந்த் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் திரு.ம.கரிகாலன், சிட்லபாக்கத்தில் பல்வேறு குடியிருப்பு நலச்சஙகத்தினரை சந்தித்து ஆதரவு கோரினார். அதனை தொடர்ந்து சிட்லப்பாக்கம் ஏரியில் நடைபயிற்சியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் திரு.ம.கரிகாலன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. ஆனந்த் அஞ்சுகோட்டை, கீழக்கோட்டை, பாண்டுகுடி, மருத வயல் உட்பட 57 கிராமங்களில் வாக்கு சேகரித்தார். பொதுமக்கள் அவருக்கு வெற்றி திலகமிட்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். கழக நிர்வாகிகளும் தேமுதிக எஸ்டிபிஐ உள்ளிட்ட தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

ராமநாதபுரம் தொகுதி கழக வேட்பாளர் திரு.ஜி. முனியசாமி தொகுதிக்கு உட்பட்ட 20 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் கழக வேட்பாளர் பேராசிரியர் மா.ஜெயபால் தொகுதிக்குட்பட்ட புதூர், அண்ணாநகர், ரேஸ்கோர்ஸ்காலனி ஆகிய பகுதிகளில் வீடு வீடாக நடந்துசென்று பொதுமக்களை சந்தித்து குக்கர்சின்னத்தில் வாக்களிக்க கோரி வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஜெயகுமார், தொகுதிக்குட்பட்ட திம்மரசநாயக்கனூர், மேக்கிழார் பட்டி, மறவபட்டி முல்லையம்பட்டி, கன்னியப்ப பிள்ளைபட்டி, வரதராஜபுரம், உள்ளிட்ட பகுதிகளில் குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். கழக வேட்பாளருக்கு குக்கருடன் வந்த பெண்கள் மலர்தூவி ஆரத்தி எடுத்து, வரவேற்பு கொடுத்தனர்.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் கழகம் சார்பில் போட்டியிடும் திரு.ஆர்.வி.ரஞ்சித் குமார், தொகுதிக்கு உட்பட்ட அங்கம்பாக்கம், தம்மனூர், கம்மராஜபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.