தூய்மைப்பணியாளர்கள் திடீரென வேலையை விட்டு நீக்கம் - டிடிவி தினகரன் கண்டனம்

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்கள் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தூய்மைப்பணியாளர்களை வேலையை விட்டு நீக்கி இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், முன்களப்பணியாளர்களாக நின்ற தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேரை சென்னை மாநகராட்சி திடீரென வேலையை விட்டு நீக்கி இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது எனவும்.

அதிலும் பொங்கல் பண்டிகை நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டுமென சென்னை மாநகராட்சியை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.