ஆங்கிலேயே அடக்குமுறை உயிர்த்தியாகம் செய்த தியாகிகளை போற்றுவோம்

ஆங்கிலேயே அடக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த மாயக்கா உள்ளிட்ட பெண் தியாகிகளை போற்றுவோம் என கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

கழக பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு மகாத்மா காந்தியடிகள் தலைமை ஏற்பதற்கு முன்பே அகிம்சை வழியில் போராடி, உயிரை விட மானம் பெரிது என்று நிரூபித்த பெண் தியாகியான மாயக்கா உள்ளிட்ட 16 தியாகிகளையும் என்றென்றும் போற்றிடுவோம் என குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலேயரின் அடக்கு முறைக்கு எதிரான தமிழர்களின் முதல் சத்தியாகிரக போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட பெருமதிப்பிற்குரிய பெருங்காமநல்லூர் தியாகிகளை அவர்களின் நினைவு நாளில் வணங்குகிறேன் எனவும் திரு.டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.