தீரன் சின்னமலை திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்திய கழக நிர்வாகிகள்

கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ட்விட்டர் அறிக்கையில், ஆங்கிலேயர் பூட்டிய அடிமை விலங்கைத்  தகர்க்க  வீரமுடன் போராடிய மன்னர் தீரன் ;சின்னமலையின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன். இந்த நாடு சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்காக தன் இன்னுயிரை ஈந்த அம்மாவீரரின் புகழ் வரலாற்றில் என்றைக்கும் நிலைத்து நிற்கும் என தெரிவித்தார்.

பின்னர் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் ஆணைக்கிணங்க சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள அவரது மணிமண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கழக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆண்டுதோறும் ஆகஸ்டு 2 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இன்று அவரது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவ சிலைக்கு கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும் தென்சென்னை தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான திரு. ஜி செந்தமிழன், கழக கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி. சி. ஆர். சரஸ்வதி, கழக அமைப்புச் செயலாளர் திருவான்மியூர் திரு. எஸ்.முருகன், வடசென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சந்தானகிருஷ்ணன் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு.சுகுமார் பாபு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருஉருவப் படத்திற்கும் கழக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

 

இதேபோல் ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் மணி மண்டபத்தில் திருவுருவச் சிலைக்கு கழக நெசவாளர் அணி செயலாளர் திரு.ஏ.சண்முகம், ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.D.தங்கராஜ், மாநகர் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு.சக்தி என்கிற சிவஷண்முகம், புறநகர் மாவட்டக்கழக செயலாளர் திரு.எஸ்.ஆர்.செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தலைமை கழக அறிவிப்பில்!