பத்மபூஷன் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்‍கு டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

பின்னணி பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்‍கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தன் வசீகரமிக்க குரலால் மொழிகளைக் கடந்து மக்களின் நேசத்தைப் பெற்றவர் எஸ்.பி.பி. என திரு. டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார். 

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பின்னணி பாடகர் 'பத்ம பூஷன்' திரு.எஸ்.பி. பாலசுப்ரமணியம் காலமானார் என்ற செய்தி வருத்தமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் வசீகரமிக்க குரலால் மொழிகளைக் கடந்து மக்களின் நேசத்தைப் பெற்றவர் எஸ்.பி.பி. என்றும், அவர், 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் ஜொலித்தவர் எனவும் திரு.டிடிவி தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார். எஸ்.பி.பி.யின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.