சேலத்தில் அ.ம.மு.க.வில் இணைந்த ரஜினி மன்ற நிர்வாகிகள்

சேலத்தில், ரஜினி மன்ற நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், தங்களை அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தில் இணைத்துக்‍ கொண்டனர்.

சேலம் குகை ஸ்ரீ ராகவேந்திரா ரசிகர் நற்பணி மன்றத்தினர், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரனின் அரசியல் ஆளுமையை ஏற்று, தங்களை அ.ம.மு.க.வில் இணைத்துக்‍ கொண்டனர். ராகவேந்திரா நற்பணி மன்றத்தைச் சேர்ந்த சேலம் மாவட்ட தலைவர் திரு.ஐயப்பன் மற்றும் நிர்வாகிகளை, சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் திரு.வெங்கடாசலம் சால்வை அணிவித்து வரவேற்றார். அ.ம.மு.க. வெற்றிக்‍காக தேர்தல் பணியாற்றப்போவதாக கழகத்தில் இணைந்த ரஜினி மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.