டாக்டர். வி.சாந்தா காலமானார் என்ற செய்தி அறிந்து டிடிவி தினகரன் இரங்கல்

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் பத்மபூஷன் டாக்டர். வி.சாந்தா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டவர்.

பல ஆண்டுகளாக அர்ப்பணிப்பு உணர்வுடன் மருத்துவ சேவை ஆற்றிவந்த டாக்டர்.சாந்தா அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.