தேசிய நெடுஞ்சாலைகளில் கேமராக்களை பொருத்துவதற்கான டெண்டரில் விதிமீறல்?

அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தனகரன் அவர்கள் இன்று தனது டிவிட்டர் அறிக்கையில்,

தேசிய நெடுஞ்சாலைகளில் அதிவேகத்தில் செல்லும் வாகனங்களை அடையாளம் காண்பதற்கு கேமராக்களை பொருத்துவதற்கான தமிழக அரசின் டெண்டரில் விதிமீறல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் புகார் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிவேகத்தில் செல்லும் வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களைத்  தவிர்க்க கேமராக்கள் பொருத்துவதில் முறைகேடுகள் நடந்தால் அது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும்.

எனவே, செங்கல்பட்டு முதல் திருச்சி வரையில் மேற்கொள்ளப்படவுள்ள இப்பணிக்கு ரூ.25 கோடியாக இருந்த டெண்டர் மதிப்பு, ரூ.900 கோடியாக உயர்ந்தது எப்படி? டெண்டர் விதிமுறைகள் இஷ்டம்போல் மாற்றப்பட்டது ஏன்? யாருக்குச் சாதகமாக, யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன?

எனவே, செங்கல்பட்டு முதல் திருச்சி வரையில் மேற்கொள்ளப்படவுள்ள இப்பணிக்கு ரூ.25 கோடியாக இருந்த டெண்டர் மதிப்பு, ரூ.900 கோடியாக உயர்ந்தது எப்படி? டெண்டர் விதிமுறைகள் இஷ்டம்போல் மாற்றப்பட்டது ஏன்? யாருக்குச் சாதகமாக, யாருடைய தூண்டுதலின் பேரில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டன? என கேள்வி எழுப்பியுள்ளார்.