இரட்டை மலை சீனிவாசன் அவர்களுக்கு கழகம் சார்பாக மரியாதை

இரட்டை மலை சீனிவாசன் அவர்களின் 75ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தபட்டது.

இந்த நிகழ்வில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான திரு. செந்தமிழன், தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சுகுமார் பாபு, கழக பொறியாளர் அணி செயலாளரும் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளருமான திரு கரிகாலன், வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர் திரு.சந்தானகிருஷனண்,காஞ்சிபுர மாவட்ட செயலாளர் திரு.மொளச்சூர் இரா.பெருமாள், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.டி.ஏ.ஏழுமலை மற்றும் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆனால் இரட்டை மலை சீனிவாசன் அவர்களுடைய மணிமண்டபத்திற்கு செய்தி சேகரிக்கவோ ,ஒளிப்பதிவு செய்ய  ஊடகத்துறையினருக்கு காவல்துறை தரப்பிலிருந்து அனுமதி மறுக்கபட்டது.