ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம்

ஒடுக்‍கப்பட்டோரின் உயர்வுக்‍காக பாடுபட்ட திரு.ரெட்டைமலை சீனிவாசனின் நினைவுநாளான இன்று, அவர் ஆற்றியப் பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் என அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவரும், அவர்களின் உரிமைக்குரலை உலக அரங்கில் ஓங்கி ஒலித்தவருமான திரு. ரெட்டைமலை சீனிவாசனின் நினைவு நாள் இன்று அனுசரிக்‍கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ஒடுக்கப்பட்டோரின் உயர்வுக்காக அவர் ஆற்றிய பணிகளை நினைவுகூர்ந்து போற்றுவோம் என்றும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.