சுதந்திர போராட்ட வீரர் ராமசாமி படையாச்சி 103 ஆவது பிறந்த தினம்

சுதந்திர போராட்ட வீரரும் முன்னாள் அமைச்சருமான ராமசாமி படையாச்சி 103 ஆவது பிறந்த தினம் கடைபிடிக்கப்பட்டது.

அதனை முன்னிட்டு கழகப் பொதுச்செயளாலர் அவர்களின் ஆணைக்கிணங்க, சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் செல்வி சி ஆர் சரஸ்வதி  மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்த நிகழ்வில் கழக தேர்தல் பிரிவு செயலாளரும் தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான திரு. செந்தமிழன், தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் திரு. சுகுமார் பாபு,கழக பொறியாளர் அணி செயலாளரும் செங்கலபட்டு வடக்கு மாவட்ட செயலாளருமான கரிகாலன்,

வடசென்னை தெற்கு மாவட்ட செயலாளர்  சந்தானகிருஷனண் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.