பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தேர்தல் பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் உறுதி

ஆளுங்கட்சியின் பின்புலத்தில் நடந்த பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அ.ம.மு.க ஆட்சி அமைந்தவுடன், உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகம் சார்பில் பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு.சுகுமார், தே.மு.தி.க. சார்பில் வால்பாறை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வழக்‍கறிஞர் திரு.முருகராஜ் ஆகியோரை ஆதரித்து, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது உரையாற்றிய அவர், ஊழல் என்றாலே முதலில் ஞாபகம் வருவது தி.மு.க.தான் என குற்றம் சாட்டினார். பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், மக்‍கள் மன்றத்தில் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தரப்படும் என குறிப்பிட்டார்.