தமிழகத்தின் சில இடங்களில் போலி உரம் விவசாயிகளுக்குப் இழப்பீடு வழங்க வேண்டும்

அம்மா மக்‍கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தனகரன் அவர்கள் இன்று தனது டிவிட்டர் அறிக்கையில், 

தமிழகத்தின் சில இடங்களில் போலி உரம் விற்கப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து பழனிசாமி அரசு விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.இத்தகைய உரவிற்பனையில் ஈடுபட்டுள்ளோரை பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆளுங்கட்சியினரே காப்பாற்ற முயலுவதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என தெரிவிதித்துள்ளார்.

மேலும், , போலி உரத்தினை பயன்படுத்தியதால் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் போதுமான இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். தமிழகத்தில் போலி உர விற்பனையை முற்றிலுமாக தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் எடப்பாடி அரசு  மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.