ஆளுங்கட்சியினரின் தூண்டுதலின்பேரில், அ.ம.மு.க நிர்வாகி மீது பொய் வழக்கு

விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திரு.அய்யனார் மீது ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் பொய் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினருக்கு, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், விழுப்புரம் தெற்கு மாவட்டம், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றியக்‍ கழகச் செயலாளர் திரு.அய்யனார் மீது ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் பொய் வழக்கு பதிவு செய்திருக்கும், காவல் துறையினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் முன்விரோதத்தினால் திரு.அய்யனாருக்‍கு தொடர்ந்து தொல்லைக்கொடுத்து வருபவர்கள் மீதும், அவரது சகோதரி வீட்டை அடித்து நொறுக்கியவர்கள் மீதும், அதனை செய்தி சேகரிக்க சென்ற ஜெயா டிவி ஒளிப்பதிவாளரை தாக்கியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட திரு.அய்யனார் மீது வழக்கு பதிந்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.