பெரியார் பெயரை நீக்கியுள்ள காபந்து அரசுக்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்

சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு எம்.ஜி.ஆர். சூட்டிய பெரியார் பெயரை நீக்கியுள்ள பழனிசாமியின் காபந்து அரசுக்கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், சென்னை - பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் சூட்டப்பட்டிருந்த தந்தை பெரியார் பெயரை நீக்கியிருக்கும் பழனிசாமியின் காபந்து அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொண்டுள்ளார். மக்களின் உணர்வோடு விளையாடும் இந்த வேலையை இப்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ள திரு.டிடிவி தினகரன், உடனடியாக இந்த உத்தரவினை திரும்பப் பெற்று 'ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை' என்ற பெயரே தொடர்ந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.