பெரியார் சிலை அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையான கண்டனம் - டிடிவி தினகரன்

திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரில் தந்தை பெரியார் சிலை காவி வண்ணம் பூசி அவமதிக்கப்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மறைந்த தலைவர்களின் சிலைகளை இப்படி தொடர்ந்து அவமரியாதை செய்வதை ஏற்க முடியாது. சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்கும்  இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.