கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம்

கோவையில் தந்தை பெரியார் சிலை அவமதிக்‍கப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தனது டிவிட்டர் பக்‍கத்தில் இன்று வெளியிட்டுள்ள பதிவில், கோவை சுந்தராபுரத்தில் தந்தை பெரியாரின் சிலை மீது காவி வண்ணம் பூசி அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ளார். மறைந்த தலைவர்களை அவமதிப்பதன்மூலம், சமூக அமைதி சீர்குலைய யார் காரணமாக இருந்தாலும், அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இத்தகைய நிகழ்வுகளுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍ கொண்டுள்ளார்.