பெண்கள் குறித்து இழிவாக பேசிய உதயநிதியை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

பெண்களை குறித்து தரம் தாழ்ந்து பேசிய மு.க. ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினைக்‍ கண்டித்து தமிழகம் முழுவதிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

விழுப்புரம் அருகே உள்ள பெரிய செவலை கூட்ரோட்டில் உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.குமார் தலைமையில் அமமுகவினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் பொதுமக்‍களும் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். அப்போது, உதயநிதி ஸ்டாலினின் உருவப் பொம்மை தீயிட்டு எரிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் பெண்கள் குறித்து இழிவாக பேசினால் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கடுமையான போராட்டங்களில் ஈடுபடுவோம் என ஆர்பாட்டக்‍காரர்கள் எச்சரித்தனர்.