பத்ம விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

சிறப்புமிக்க பத்ம விருது பெறும் தமிழகத்தைச் சேர்ந்த சாதனையாளர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்கள் சார்ந்திருக்கிற துறைகளில் மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்துவதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சிறப்புமிக்க பத்ம விருதுகளுக்கு தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள வில்லிசைக் கலைஞர் திரு.சுப்பு ஆறுமுகம், பேராசிரியர் திரு.சாலமன் பாப்பையா, இந்திய மகளிர் கூடைப்பந்தாட்ட அணியின் முன்னாள் கேப்டன் வீராங்கனை பி.அனிதா, விவசாயி திருமதி.பாப்பம்மாள், கலைத்துறையைச் சேர்ந்த திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ, புதுச்சேரி திரு.கேசவசாமி, சமூக சேவகர் திரு.சுப்புராமன், தொழில் துறையைச் சேர்ந்த திரு.ஸ்ரீதர்வேம்பு உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இவர்கள் சார்ந்திருக்கிற துறைகளில் இன்னும் பல சாதனைகளைப்புரிய வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

மறைவுக்குப் பிறகு பத்ம விருது வழங்கப்படவிருக்கிற பிரபல பின்னணிப்பாடகர் திரு.எஸ்.பி. பாலசுப்ரமணியம், கோவை தொழிலதிபர் திரு.சுப்ரமணியம், சென்னை மருத்துவர் திரு. திருவேங்கடம் வீரராகவன், கலைத்துறையைச் சேர்ந்த திரு.கே.சி. சிவசங்கர் ஆகியோரின் புகழ் என்றும் நிலைத்திருக்கட்டும் என்றும் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.