வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன்களை பாதுகாக்க புதிய சார்பு அணி

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன்களை பேணி பாதுகாக்க, கழகத்தில் புதிய சார்பு அணியை கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், உலகளவில் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன்களை பேணி பாதுகாக்க, கழகத்தில் புதிய சார்பு அணியை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனவே, இப்பிரிவுக்கு செயலாளராக கழக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் பி. செந்தில்குமார் அவர்கள் நியமிக்‍கப்படுவதாகவும், கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகளும், கழகத்தினரும் இவர்களுக்‍கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.