பல மாவட்டங்களுக்‍கு புதிய நிர்வாகிகளை கழகப் பொதுச் செயலாளர் நியமித்துள்ளார்

கடலூர் கிழக்‍கு, திருவண்ணாமலை மத்திய மாவட்டம், திருப்பூர் புறநகர், திருநெல்வேலி மாநகர் உள்ளிட்ட மாவட்டங்களுக்‍கு புதிய நிர்வாகிகளை, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடலூர் கிழக்‍கு மாவட்டக்‍கழக நிர்வாகிகள், பொதுக்‍குழு உறுப்பினர்கள், சார்பு அணிச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்கள் நியமிக்‍கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மத்திய மாவட்ட இதயதெய்வம் அம்மா பேரவை செயலாளராக திரு.​C. விஜயகுமார், திருவண்ணாமலை மத்திய மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக திரு.V.S.R. விஜய் ஆனந்த், திருவண்ணாமலை மத்திய மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவுத் தலைவராக திரு.Y. சையத் யூசப், செயலாளராக திரு. H.R.S. அர்பத் என்கிற ஹுமாயூன் கபூர் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளதாக, திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

திருப்பூர் புறநகர் மாவட்டம், காங்கேயம் நகரக்‍கழகச் செயலாளராக திரு.K.R. தண்டபாணி, ஜமீன் ஊத்துக்‍குளி பேரூராட்சிக்‍கழகச் செயலாளராக திரு.K. கார்த்திக் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ஒன்றியம் - வாலாஜா கிழக்‍கு, வாலாஜா மேற்கு என பிரிக்‍கப்பட்டுள்ளது. வாலாஜா கிழக்‍கு ஒன்றிய கழகச் செயலாளராக திரு.G. வீரமணி, வாலாஜா மேற்கு ஒன்றிய கழகச் செயலாளராக திரு. A.K.S. ஜீவானந்தம் ஆகியோர் நியமிக்‍கப்பட்டுள்ளனர். இதேபோல், மாவட்ட ஊராட்சி, வார்டு கழகச் செயலாளர்களும் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கரூர் மேற்கு, நாகப்பட்டினம் வடக்‍கு, திருநெல்வேலி மாநகர், நாமக்‍கல் மேற்கு, சேலம் மத்திய மாவட்ட ஊராட்சி, வார்டு கழகச் செயலாளர்களையும், கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.