தலைமைக்‍கழக அறிவிப்பு: புதிய கழக நிர்வாகிகள் நியமிக்‍கப்பட்டுள்ளனர்

வடசென்னை வடக்‍கு மாவட்டம், வடசென்னை வடக்‍கு - கிழக்‍கு, வடசென்னை வடக்‍கு - மேற்கு என பிரிக்‍கப்படுவதாக, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடசென்னை வடக்‍கு மாவட்டம், வடசென்னை வடக்‍கு - கிழக்‍கு, வடசென்னை வடக்‍கு - மேற்கு என பிரிக்‍கப்படுவதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

வடசென்னை வடக்‍கு - கிழக்‍கு மாவட்டக்‍கழகச் செயலாளராக திரு.E. லட்சுமி நாராயணன், வடசென்னை வடக்‍கு - மேற்கு மாவட்டக்‍கழகச் செயலாளராக வெற்றிநகர் திரு.M. சுந்தர் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

தென்சென்னை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி மற்றும் வட்டக்‍கழக நிர்வாகிகள் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

தேனி வடக்‍கு, திருவண்ணாமலை மத்தியம், புதுக்‍கோட்டை மத்திய மாவட்டக்‍கழக நிர்வாகிகள், பொதுக்‍குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழகச் செயலாளர்களும் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கடலூர் வடக்கு, திருநெல்வேலி புறநகர் தெற்கு, கன்னியாகுமரி மேற்கு, கோவை கிழக்‍கு மாவட்ட ஊராட்சி மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் நியமிக்‍கப்பட்டுள்ளதாக திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி வடக்‍கு, மதுரை புறநகர் வடக்‍கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், சார்பு அணி செயலாளர்கள் நியமிக்‍கப்பட்டுள்ளனர்.

கோவை கிழக்‍கு மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம் இரண்டாகப் பிரிக்‍கப்பட்டுள்ளது. இதன்படி, சுல்தான்பேட்டை ஒன்றியம் - சுல்தான்பேட்டை கிழக்‍கு ஒன்றியம், சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம் என பிரிக்‍கப்பட்டுள்ளன.

திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டம், வள்ளியூர் ஒன்றியம் என பிரிக்‍கப்பட்டுள்ளது. இதன்படி, வள்ளியூர் ஒன்றியம் - வள்ளியூர் வடக்‍கு ஒன்றியம், வள்ளியூர் தெற்கு ஒன்றியம் என பிரிக்‍கப்பட்டுள்ளன.

கோவை தெற்கு மாவட்டம், ஆனைமலை கிழக்‍கு ஒன்றியக்‍கழகச் செயலாளராக திரு.R.K. ஆறுமுகம் நியமிக்‍கப்பட்டுள்ளார்.

மதுரை மாநகர் வடக்‍கு மாவட்ட பரவை பேரூராட்சிக்‍கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழகச் செயலாளர்களையும் கழகப் பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் நியமித்துள்ளார்.

தலைமைக்‍கழக அறிவிப்பு

கழகப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில் வடசென்னை வடக்‍கு மாவட்டம் பிரிக்‍கப்பட்டுள்ள நிலையில், அதில் செயல்படவிருக்‍கும் சட்டமன்றத் தொகுதிகளின் விவரங்களை, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அ.ம.மு.க வடசென்னை வடக்‍கு மாவட்டக்‍கழக பணிகளை விரைவுப்படுத்திடும் வகையில், வடசென்னை வடக்‍கு - கிழக்‍கு மாவட்டம் மற்றும் வடசென்னை வடக்‍கு - மேற்கு மாவட்டம் என கழக அமைப்பு ​ரீதியாக இரு மாவட்டங்களாக பிரிக்‍கப்பட்டு, கீழ்கண்ட சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்‍கி செயல்படும் என தெரிவித்துள்ளார்.

இதன்படி, வடசென்னை வடக்‍கு - கிழக்‍கு மாவட்டத்தில், டாக்‍டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதி மற்றும் பெரம்பூர் சட்டமன்றத்தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.

இதேபோல், வடசென்னை வடக்‍கு - மேற்கு மாவட்டத்தில், வில்லிவாக்‍கம் சட்டமன்றத் தொகுதி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிகள் அடங்கும்.