கழக நிர்வாகிகளை நியமித்து கழகப் பொதுச் செயலாளர் உத்தவிட்டுள்ளார்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர், கழக தலைமை நிலையச் செயலாளர், கழக தேர்தல் பிரிவு செயலாளர் ஆகிய பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமித்து கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் உத்தவிட்டுள்ளார்.

அ.ம.மு.க தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கழக துணைப் பொதுச்செயலாளராக முன்னாள் அமைச்சரும், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளருமான திரு.G.செந்தமிழன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இவர், ஏற்கனவே கழக துணைப் பொதுச்செயலாளர்களாக செயலாற்றி வரும் திரு.P.பழனியப்பன் மற்றும் திரு.M.ரெங்கசாமி ஆகியோருடன் இணைந்து பணியாற்றுவார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கழக பொருளாளராக முன்னாள் அரசு கொறடாவும், திருச்சி வடக்கு மாவட்ட அமமுக செயலாளருமான திரு.R.மனோகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கழக தலைமை நிலையச் செயலாளராக முன்னாள் அமைச்சரும், திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளருமான திரு.C.சண்முகவேலு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், ஏற்கனவே கழக தலைமை நிலையச்செயலாளராக செயலாற்றி வரும் திரு.K.K.உமாதேவனுடன் இணைந்து பணியாற்றுவார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கழக தேர்தல் பிரிவு செயலாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான திரு.N.G.பார்த்திபன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர், ஏற்கனவே கழக தேர்தல் பிரிவு செயலாளராக செயலாற்றி வரும் திரு.S.V.S.P.மாணிக்கராஜாவுடன் இணைந்து பணியாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய நிர்வாகிகளில் இதுவரை கழக தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்த திரு.R.மனோகரனும், கழக தேர்தல் பிரிவு செயலாளர் பொறுப்பிலிருந்த திரு.G.செந்தமிழனும், கழக அமைப்பு செயலாளர் பொறுப்பிலிருந்த திரு.C.சண்முகவேலும் அந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு அ.ம.மு.க தலைமைக்‍கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.