புதிய நிர்வாகிகளை நியமித்தார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

தென்சென்னை, கடலூர், நாமக்‍கல் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்திற்கு புதிய நிர்வாகிகளை, கழக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் நியமித்துள்ளார். 


அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளராக கழக தேர்தல் பிரிவு செயலாளர் திரு. G.செந்தமிழனும், கழக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளராக திரு. V.M.சூரியமூர்த்தியும், கழக அம்மா பேரவை துணை செயலாளராக திரு. விருகை T.S.கண்ணனும் நியமிக்‍கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

கடலூர் கிழக்‍கு மற்றும் வடக்‍கு மாவட்டங்கள் 3-ஆக பிரிக்‍கப்பட்டுள்ளது. அதன்படி, கடலூர் வடக்கு மாவட்டம், கடலூர் கிழக்கு மாவட்டம் மற்றும் கடலூர் மத்திய மாவட்டம் என பிரிக்கப்படுவதாக திரு.டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். கடலூர் வடக்கு மாவட்ட கழக செயலாளராக திரு. அக்ரி P.முருகேசனும், கடலூர் கிழக்கு மாவட்ட கழக செயலாளராக ஆடிட்டர் திரு.N.சுந்தரமூர்த்தியும், கடலூர் மத்திய மாவட்ட கழக செயலாளராக டாக்டர்.A.B.R.பக்தரட்சகனும் நிமியக்‍கப்பட்டுள்ளனர். 

நாமக்கல் வடக்கு மாவட்டம், ராசிபுரம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை ஒன்றியங்கள் பிரிக்‍கப்பட்டு, நாமக்‍கல் வடக்‍கு மாவட்டத்திற்கு கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சிகளுக்‍கு செயலாளர்களும் நியமிக்‍கப்பட்டுள்ளனர். 

திருவாரூர், திருநெல்வேலி புறநகர் வடக்கு, தேனி மாவட்ட ஊராட்சி மற்றும் வார்டு கழக செயலாளர்களும் நியமிக்‍கப்பட்டுள்ளதாக கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.