தாய்நாட்டிற்காக தியாகங்களைப் புரிந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போற்றி வணங்கிடுவோம்

தாய்நாட்டின் மீது கொண்ட பாசத்திற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்றும், அவரது பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம் எனவும், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக இருந்த வீரத்திருமகன், தாய்நாட்டின் மீது கொண்ட பாசத்திற்காக எண்ணற்ற தியாகங்களைப் புரிந்த தேசத்தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுவதாகத் தெரிவித்துள்ளார். "இன்னொரு பிறவி எடுத்தால் அதில் தமிழனாக பிறக்க வேண்டும்" என்று அறிவித்து, தமிழர்களையும், நம் தமிழக மண்ணையும் மனதார நேசித்த மாவீரர் நேதாஜியின் பெருமைகளைப் போற்றி வணங்கிடுவோம்! என்றும் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.