பாசிசத்தை எதிர்ப்பதில் உறுதியாக செயல்படும் அமமுகவை இஸ்லாமியர்கள் ஆதரிக்க வேண்டும்

பாசிசத்தை எதிர்ப்பதில் உறுதியாக செயல்படும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍ கழகத்தை, இஸ்லாமியர்கள் ஆதரிக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு. தெஹலான் பாகவி வலியுறுத்தியுள்ளார்.

திருவாடானை தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் திரு. வ.து.ந.ஆனந்தை ஆதரித்து, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் திரு. தெஹ்லான் பாகவி, தேவிபட்டினம், தொண்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தேவிபட்டினத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அவர்,மதநல்லிணக்கத்தை காக்கவும், அடிமை அரசாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்டவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்‍கொண்டார். பாசிச பாஜகவை எதிர்க்க உறுதியான கட்சியாக திகழும் அமமுக மீது நம்பிக்கை வைத்து குக்கர் சின்னத்திற்கு வாக்களிக்‍குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.