புரட்சித் தலைவரின் 33வது நினைவு தினம் மரியாதை செலுத்துகிறார் மக்கள் செல்வர்

புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆரின் 33-வது நினைவு நாளையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில், வரும் 24-ம் தேதி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் மரியாதை செலுத்துகிறார். 

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைமைக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பிடித்த பொன்மனச்செம்மல், பேரறிஞர் அண்ணாவின் இதயக்கனி, ஏழை - எளிய மக்களுக்காகவே சிந்தித்து, திட்டங்களைச் செயல்படுத்திய தீர்க்கதரிசி, தீய சக்திகளால் வீழ்த்தவே முடியாத வெற்றித் திருமகன், நம் கொள்கை தலைமகன், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 33-வது நினைவு நாள் வரும் 24-ம் தேதி கடைபிடிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம் காலை 11 மணிக்கு, தமிழ்நாட்டின் தங்க மகன் புரட்சித்தலைவர் துயில் கொள்ளும் மெரினா கடற்கரை நினைவிடத்தில், ஒவ்வொரு கணமும் நம்மை இயக்கிக்கொண்டிருக்கிற இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் வழியில், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரன் தலைமையில் மரியாதை செலுத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணிகளின் நிர்வாகிகள் போதிய சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ள வேண்டும் என்று அ.ம.மு.க தலைமைக்‍கழகம் வெளியிட்டுள்ள அறிக்‍கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.