அரசு கல்லூரிகளில் போராடும் மருத்துவ மாணவர்கள் - அமமுக பங்கேற்று ஆதரவு

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட ராஜா முத்தையா மருத்துவக்‍கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் அரசு நிர்ணயித்த கல்விக்‍கட்டணத்தை வசூலிக்‍கக்‍‍‍கோரி சென்னையில் மருத்துவ மாணவர்கள் நடத்திய போராட்டத்தில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு ஆதரவு​தெரிவித்தனர்.

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரியின் கல்விக் கட்டணத்தை குறைக்கக்கோரி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் சார்பில் சென்னை சேப்பாக்‍கத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மருத்துவ மாணவர்கள், தங்களது கோரிக்‍கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

இப்போராட்டத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் திரு.ஜி.செந்தமிழன், கழக கொள்கைப் பரப்புச் செயலாளர் செல்வி சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் கலந்துகொண்டு, ஆதரவு தெரிவித்தனர். கழக இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் வியாசர்பாடி திரு.ராஜூ, கழக மருத்துவர் அணி தலைவர் டாக்டர் காளிதாஸ், வடசென்னை மத்திய மாவட்டச் செயலாளர் திரு.லட்சுமி நாரயணன், வட சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் வெற்றி நகர் திரு.சுந்தர், மத்திய சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் திரு. ராஜேந்திரன், மத்திய சென்னை மத்திய மாவட்டச்செயலாளர் திரு.சந்தானகிருஷ்ணன், மத்திய சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் திரு.சுகுமார் பாபு, தென்சென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.பரணீஸ்வரன், திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் திரு.வேதாச்சலம் உள்ளிட்ட அமமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் திரு.டி.கே.ரெங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் திரு.சி.மகேந்திரன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் திரு.ஜவஹிருல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.