முன்னாள் செய்தி-மக்‍கள் தொடர்புத்துறை அதிகாரி மறைவு - டிடிவி தினகரன் ஆறுதல்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில், முன்னாள் செய்தி-மக்‍கள் தொடர்புத்துறை அதிகாரி திரு. ராஜேந்திரன், அண்மையில் காலமானதை அடுத்து, அவரது இல்லத்திற்கு, கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் நேரில் சென்று, குடும்பத்தினருக்‍கு ஆறுதல் தெரிவித்தார். 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி காமராஜர் நகரைச் சேர்ந்த, முன்னாள் செய்தி-மக்கள் தொடர்புத்துறை அதிகாரியும், திரு.டிடிவி தினகரனின் உறவினருமான திரு.ராஜேந்திரன் அண்மையில் காலமானார். இந்நிலையில், மன்னார்குடி காமராஜர் நகரில் உள்ள ராஜேந்திரனின் இல்லத்திற்குச் சென்ற, அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன், அவரது குடும்பத்தினருக்‍கு ஆறுதல் தெரிவித்தார். கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.ரெங்கசாமி, திருவாரூர் மாவட்டக்‍ கழக செயலாளர் திரு.எஸ். காமராஜ், தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு.மா. சேகர், நாகை மாவட்டச் செயலாளர் மஞ்சுளா சந்திரமோகன், அம்மா தொழிற்சங்கப் பேரவை துணைச் செயலாளர் திரு.சத்தியமூர்த்தி, மன்னார்குடி நகரக்‍ கழகச் செயலாளர் திரு.ஆனந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.