கூடலூர் ஆலோசனை கூட்டம் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி

கழக பொது செயலாளர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி மாவட்ட கழக செயலாளர் திரு எஸ். கலைச்செல்வன் அவர்களின் தலைமையில் 20-09-20 அன்று கூடலூர் சட்டமன்ற தொகுதி கழக வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் நெல்லியாளம் நகரம் மற்றும் பந்தலூர் ஒன்றிய பகுதிகளில் இருந்து மாற்று கட்சியினர் அமமுகவில் இணையும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்  திரு. தேனாடு லட்சுமணன் கழக அமைப்புச் செயலாளர் திரு ராயப்பன், மாநில தோட்ட தொழிலாளர் சங்க தலைவர் திரு. கே.என் துரை, மாவட்ட அவைத் தலைவர் திரு. சையத் முபாரக், குன்னூர் நகர கழக செயலாளர் திரு நாசர், நெல்லியாளம் நகர பொருப்பாளர்

திரு. கணேசன், திரு. யோகேஷ் பந்தலூர் ஒன்றிய பொருப்பாளர்கள் திரு. சையத் சஜாத், கூடலூர் நகர பொருப்பாளர் திரு பாலகிருஷ்ணன், கூடலூர் ஒன்றிய பொருப்பாளர் திரு நவநீதராஜா, திரு. இன்பராஜ், திரு சூர்யா, திரு தேவநாயகம், திரு. குபேந்திரன், திரு. பாஸ்டர் டேவிட் , திரு. பூவேந்திரன் கலந்து கொண்டனர்.

மற்றும் கிளை கழக நிர்வாகிகள் ஊராட்சி மற்றும் பேரூராட்சி கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.